வெளிநாட்டில் வசிக்கும் நபர் கொழும்பில் நடத்திய பிரமாண்டமான விருந்து
வெளிநாட்டில் வசிக்கும் சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர்களின் ஒருவரான பறை சுதா என்பவர், தனது பிறந்தநாளுக்காக கோட்டை உள்ள மண்டபத்தில் தனது ஆதரவாளர்களுக்கு பிரமாண்டமான விருந்து வைத்துள்ளார்.
200க்கு மேற்பட்ட ஆதரவாளர்கள் அதில் கலந்துக் கொண்ட நிலையில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரூபாய் பணம் செலவிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த விருந்து போதைப்பொருள் கடத்தல்காரரின் நிதி பங்களிப்பில் நடத்தப்படும் அறக்கட்டளையின் கூட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
புலனாய்வு வட்டாரங்கள்
கொழும்பில் உள்ள பல்வேறு நகரங்களின் தோட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்து இந்த விருந்துக்கு வந்துள்ளனர்.
பெண்களுக்கு முன்கூட்டியே புடவைகள் வழங்கப்பட்டதாகவும், ஆண்களுக்கு டி சேர்ட்கள் வழங்கப்பட்டதாகவும் புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விருந்து கடந்த வார இறுதியில் இரவில் நடைபெற்றது. போதைப்பொருள் மூலம் சம்பாதித்த கருப்புப் பணத்தை வெள்ளையாக்க இந்த அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னணியில் உள்ள வலையமைப்பை இப்போது புலனாய்வு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளதாக புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டிலிருந்து வீடியோ அழைப்பு மூலம் நேரடியாக இந்த விருந்துக்கு பறை சுதா இணைக்கப்பட்டதாக புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போதைப்பொருள்
கடந்த போசன் போயா தினத்தன்று பொரளையில் போதைப்பொருள் பணத்தைப் பயன்படுத்தி தலா 15,000 ரூபாய் பெறுமதியான பொருட்களை கொண்ட 1000க்கும் மேற்பட்ட பைகள் விநியோகித்ததாக கூறப்படுகிறது.
இந்த பொருட்கள் அடங்கிய பைகள் ஒரு சுப்பர் மார்க்கெட்டிலிருந்து பெறப்பட்டு இரண்டு நாட்களில் லொறிகள் மற்றும் கொள்கலன்களில் விநியோகிக்கப்பட்டன. அந்தப் பைகளில் தலா 10 கிலோ அரிசி மற்றும் 10 முட்டைகளும் அடங்கியுள்ளது.
மேலும், 2000 அரிசி பொட்டலங்களும் ஒரே நேரத்தில் விநியோகிக்கப்பட்டதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விருந்தை பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவினர் வீடியோ எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா





கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
