அம்பாறையில் தமிழ் பொது வேட்பாளருக்கு பெரும் வரவேற்பு
ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனுக்கு இன்று (10) அம்பாறை மாவட்டத்தில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
அவருடன் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா. நடராஜா உள்ளிட்டோரும் வருகை தந்திருந்தனர்.
தமிழ்த் தேசியப் பொது கட்டமைப்பு உறுப்பினர்கள்
முதலில் அம்பாறை மாவட்ட எல்லையில் உள்ள பெரிய நீலாவணையில் அரியநேத்திரனுக்குப் வரவேற்பளிக்கப்பட்டது.

தாயக செயலணியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவருமான முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் பொன்னாடை போர்த்தி வரவேற்றார் .
ஏனைய தாயக செயலணி உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசியப் பொது கட்டமைப்பு உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அங்கே முருகன் கோயிலில் சிறப்பு பூஜை இடம்பெற்றதுடன் அதனைத் தொடர்ந்து கல்முனை, காரைதீவு, அக்கரைப்பற்று போன்ற பகுதிகளிலும் தமிழ்ப் பொது வேட்பாளருக்குப் பெரு வரவேற்பு அளிக்கப்பட்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஈரான் - அமெரிக்க போரில் புதிய திருப்பம்! போர்க்களத்தில் இறங்கப்போகும் உக்ரைன் ரோபோக்கள் (காணொளி) News Lankasri
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam