பனிப்போர் முடிவுக்கு வருகிறதா..! ஜோ பைடனை சந்தித்த சீன ஜனாதிபதி
கடந்த காலமாக சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையில் நிலவி வந்த பதற்றங்களுக்கு மத்தியில் இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவாரத்தையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெறும் அபெக் உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீண்ட காலமாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நீடித்த வர்த்தகப் போட்டிகள், பொருளாதாரத் தடைகள், தாய்வான் விவகாரம் உள்ளிட்ட அரசியல் முரண்கள் மற்றும் அமெரிக்க வான் பரப்பில் பறந்த சீன உளவு பலூன் போன்ற பல்வேறு காரணங்களினால் பனிப்போர் நீடித்து வந்தது.
இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விதமாக இருதலைவர்களும் சந்தித்துப் பேச முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் உடனடியாக இதற்கான தீர்வு எட்டப்பவில்லை என்றாலும் எதிர்காலத்தில் மோதல் நிலை சற்று தளர்வுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |