கம்பஹாவில் போதைக்கு அடிமையான இளைஞரின் சைக்கிள் திருட்டு
கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த போதைக்கு அடிமையான இளைஞர் சைக்கிள்களைத்திருடி விற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா ஒருதொட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப் பழக்கத்துக்கு கடுமையான முறையில் அடிமையாகி இருந்த குறித்த இளைஞர் சைக்கிள்களை திருடி அவற்றை விற்பனை செய்தும், அடகு வைத்தும் போதைப் பாவனைக்கான பணத்தைத் தேடிக் கொண்டுள்ளார்.

சைக்கிள்கள் திருட்டு
கம்பஹா, யக்கல போன்ற பிரதேசங்களில் அதற்காக சுமார் 38 சைக்கிள்கள் வரை திருடியுள்ளார்.
சைக்கிள் ஒன்றை 80 ஆயிரம் தொடக்கம் ஒரு லட்சம் வரையான தொகைக்கு விற்பனை செய்துள்ளார்.
சந்தேக நபரினால் திருடப்பட்ட 21 சைக்கிள்களின் உரிமையாளர்களை பொலிஸார் விசாரணைகள் மூலம் கண்டறிந்துள்ளனர்.

மில்லிகிராம் அளவில் போதைப்பொருள் கைப்பற்றப்படல்
அத்துடன் சந்தேக நபரை கைது செய்யும் போது அவரிடம் இருந்து இரண்டு மில்லிகிராம் அளவிலான போதைப் பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் பொலிஸாற் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam