துவிச்சக்கரவண்டியில் சென்றவர் லொறி மோதி மரணம் - சாரதி தப்பியோட்டம்
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அட்டாளைச்சேனை பகுதியில் துவிச்சக்கரவண்டியில் சென்ற ஒருவர் லொறியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து அட்டாளைச்சேனை பகுதியில் உள்ள பிரதான வீதியில் இன்று(3) மாலை இடம்பெற்றுள்ளது.
வீதி திருத்த வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்த மண் லொறி பிரதான வீதியால் சென்று கொண்டிருந்த நிலையில் முன்னால் துவிச்சக்கரவண்டியில் சென்ற நபரை மோதி தப்பிச் சென்றுள்ளது.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்தவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தின் சிசிடிவி காட்சியும் தற்போது பெறப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தப்பிச் சென்ற சாரதியைக் கைது செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.









13 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி செய்துள்ள மொத்த வசூல்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
