வாக்காளர் பதிவு அவசியத்தை வலியுறுத்தி சைக்கிள் பேரணி யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுப்பு (Photo)
பொதுமக்கள் வாக்காளராகப் பதிவு செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இன்று காலை 7.30 மணியளவில் மாவட்ட செயலகம் முன்றலில் இருந்தும், காலை 8 மணியளவில் கொடிகாமம் பஸ் நிலைய முன்றலில் இருந்தும் ஆரம்பித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி சாவகச்சேரி - சங்கத்தானை ரயில் நிலையம் அருகில் வந்து, அங்கிருந்து பேரணி தென்மராட்சி கலாசார மண்டபம் வரை சென்று நிறைவடைந்தது.
அதன் பின்னர் தேர்தல் விழிப்புணர்வு மற்றும் வாக்குரிமை அளித்தல், வாக்காளராகப் பதிவு செய்தல் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்வுகளும் நாடகங்களும் இடம்பெற்றன.
இந்த நிகழ்வுகளில் யாழ். மாவட்ட அரச அதிபர் க.மகேசன், மேலதிக அரச அதிபர் பிரதீபன், மேலதிக அரச அதிபர் (காணி) முரளிதரன், மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ், பிரதேச செயலர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
பெப்ரவரி முதலாம் திகதி வாக்காளர் தினம் அனுஷ்டிக்கப்படும் நிலையில் இன்று
யாழ். மாவட்டத்தில் இந்த நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டன.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 3 மணி நேரம் முன்
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
லொட்டரியில் கொட்டிய $803 மில்லியன் அதிர்ஷ்ட மழை: புளோரிடாவை சேர்ந்த நபருக்கு கிடைத்த ஜாக்பாட் News Lankasri
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri