ஐரோப்பிய நாடுகளைப் போன்று இலங்கையிலும் நடைமுறைக்கு வரவுள்ள திட்டம்
ஐரோப்பிய நாடுகளைப் போன்று இலங்கையிலும் துவிச்கக்கர வண்டி பாவனையை பிரபலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை அடுத்து இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பில் துவிச்சக்கர வண்டி பாவனை
கொழும்பின் புறநகர் பகுதிகளில் பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி பாவனை முன்னிலைப்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு நகருக்கு ரயிலில் வரும் மக்கள் வீட்டில் இருந்து ரயில் நிலையம் வரை துவிச்சக்கர வண்டியில் வருவதற்கும் ஊக்குப்படுத்தும் நடவடிக்கை போக்குவரத்து அமைச்சினால் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நாளாந்தம் கொழும்புக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கும் நோக்கத்துடன் துவிச்சக்கர வண்டி பாவனையாளர்களின் பாதுகாப்புக்காக தனியான ஒழுங்கை ஒன்றும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
ரயில் நிலையங்களில் துவிச்சக்கர வண்டி
ரயில் நிலையங்களுக்கு அருகாமையிலும் துவிச்சக்கர வண்டி மத்திய நிலையங்களை அமைக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இலங்கை வரும் அதிகளவான சுற்றுலா பயணிகள் துவிச்சக்கர வண்டியை பயன்படுத்தி வருகின்றனர்.
பல ஐரோப்பிய நாடுகளில் துவிச்சக்கர வண்டியை பாவனையை அரசாங்கம் ஊக்குவிப்பதுடன் அதற்கான சலுகைகளையும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவியில் இருந்து பிரியங்காவிற்கு கொடுக்கப்பட்ட பரிசு.. பதறிய தொகுப்பாளினி, அப்படி என்ன கொடுத்தாங்க? Cineulagam
