திருகோணமலையில் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு
திருகோணமலையில் சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது, இன்று (07.05.2024) நடைபெற்ற நிலையில், குச்சவெளி, கோமரங்கடவெல, மொரவெவ பிரதேச செயலக பிரிவை சேர்ந்த அறுபது மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாடசாலை கல்வியை நிறைவு செய்த மாணவர்களுக்கான தொழிற்பயிற்சிக்கான காசோலைகளும் மற்றும் சுயதொழிலுக்கான காசோலைகளும் இதன் போது வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் கலந்துகொண்டோர்
இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக திருகோணமலை
மாவட்ட செயலாளர் சாமிந்த ஹெட்டியாராச்சி, மேலதிக மாவட்ட செயலாளர்
ஜே.எஸ்.அருள்ராஜ் ,மாவட்ட செயலக ஊழியர்கள், மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |