ஜனாதிபதியின் அமைச்சரவையில் கடமையாற்றும் சிலர் லஞ்சம் பெறுகின்றனர்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அமைச்சரவையில் கடமையாற்றும் சிலர் லஞ்சம் பெற்றுக் கொள்வதாக அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி குற்றம் சுமத்தியுள்ளார்.
மதுபான வியாபாரிகளிடம் பணம் பெற்றுக் கொள்ளும் சில அதிகாரிகள் ஜனாதிபதியின் கீழ் இயங்ககும் அமைச்சு ஒன்றில் கடமையாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நபர்கள் யார் என்பது விரைவில் அம்பலப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதி அமைச்சின் சில அதிகாரிகள் மது வியாபாரிகளிடம் பணம் பெற்றுக் கொள்வதனால் மதுபான விலைகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
விலை அதிகரிப்பு பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் இடமளிப்பதில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த கால பிழைகளை திருத்திக் கொள்ள முடியாத சில அரச அதிகாரிகள் இருப்பதாகக் குறிப்பட்டுள்ளார்.
அவ்வாறானவர்களை அம்பலப்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.




