மனோஜ் பாரதிராஜாவின் இறுதிச் சடங்கில் பலரையும் நெகிழ வைத்த சம்பவம்

Manoj Bharathiraja Tamil Cinema India Bharathiraja
By Laksi Mar 27, 2025 11:08 AM GMT
Report

மனோஜ் பாரதிராஜாவின் (Manoj Bharathiraja) இறுதிச் சடங்கில் அவரது மூத்த மகள் தனது தந்தைக்கான இறுதிச் சடங்கை சம்பிரதாயப்படி செய்தமை பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மனோஜின் சமுதாய வழக்கப்படி  இறுதிச் சடங்கில் மூத்த ஆண் மகன் தான் பானையை தோளில் சுமந்து சுற்றி வருவது வழக்கம்.

ஆனால், மனோஜிற்கு ஆண் மகன் இல்லாத காரணத்தினால் அவரது மூத்த மகள் இறுதிச் சடங்கு செய்ய முன் வந்தார்.

ஆண் மகன் போல பானையை தோளில் சுமந்து தந்தையின் உடலை சுற்றி வந்து இறுதிச் சடங்கை நடத்தியது காண்போரை கலங்கச் செய்துள்ளது.

தீயில் சங்கமமானார் மனோஜ் பாரதிராஜா

தீயில் சங்கமமானார் மனோஜ் பாரதிராஜா

இறுதிச் சடங்கு

சமுதாய வழக்கப்படி மயானத்திற்கு பெண்கள் செல்ல மாட்டார்கள் என்ற போதிலும் அங்கு நடைபெற்ற அனைத்து சடங்குகளையும் பெண்களே முன்நின்று நடத்தியுள்ளனர்.

மனோஜ் பாரதிராஜாவின் இறுதிச் சடங்கில் பலரையும் நெகிழ வைத்த சம்பவம் | Bharathiraja Son Manoj Passed Away

இயக்குநர் இமயம் என அழைக்கப்படும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா கடந்த (26) ஆம் திகதி மாரடைப்பால் காலமானார்.

தனது ஆசைக்காக திரைப்படங்களை இயக்குவதிலும், தந்தையின் ஆசைக்காக படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வந்த மனோஜ், "வருஷமெல்லாம் வசந்தம்", "சமுத்திரம்", "அல்லி அர்ஜுனா", உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக மட்டுமல்லாமல் இரண்டாவது நாயகனாகவும், "தாஜ்மஹால்", "ஈர நிலம்", "சாதுர்யன்" உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும், "மார்கழி திங்கள்" என்கிற படத்தை இயக்கியும் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி வருவாயில் பாரிய அதிகரிப்பு

இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி வருவாயில் பாரிய அதிகரிப்பு

வைரமுத்தியம் பன்னாட்டுக் கருத்தரங்கில் கல்லாறு சதீஷ்

வைரமுத்தியம் பன்னாட்டுக் கருத்தரங்கில் கல்லாறு சதீஷ்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US