3 நிமிடங்களில் 900 பேரை பணிநீக்கம் செய்த இந்திய தொழில் அதிபர்
அமரிக்காவில் தொழில் நிறுவனத்தை நடத்தி வரும் விஷால் கார்க் (Vishal-Garg) என்ற இந்திய தொழில் அதிபர் காணொளி மாநாட்டின்( video conference)வாயிலாக 3 நிமிடங்களில், 900 பேரை திடீர் பணி நீக்கம் செய்துள்ளார்.
இதன் காரணமாக நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 15 சதவீதமானோர் பணிகளை இழந்துள்ளனர்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஷால் கர்க், வலைதள வீட்டு வசதி கடன் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இந்த வலைதளத்தில் முகவர் கட்டணமின்றி நிலம், வீடு வாங்க கடன் வசதி பெறலாம் என்ற காரணத்தினால், சொத்து விற்பனை துறையில் இந்த நிறுவனம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்தநிலையில் தமது நிறுவனத்தின் பலர் 8 மணி நேர வேலைக்கான சம்பளத்தை பெற்றுக்கொண்டு 2 மணி நேரம் மட்டுமே வேலை பார்ப்பதாக குறிப்பிட்டே 900 பேரை, குறித்த தொழிலதிபர் பணிநீக்கம் செய்துள்ளார்.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
