ஆட்டத்தின் போக்கை மாற்றிய தோனியின் துடுப்பாட்டம்: மும்பையை வீழ்த்திய சிஎஸ்கே
ஐபிஎல் தொடரின் 29 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ்(MI) அணியை 20 ஓட்டங்களால் சென்னை அணி(CSK) வெற்றிக்கொண்டுள்ளது.
மும்பை வான்கடே விளையாட்டரங்கில்(Cricket stadium in Mumbai) நேற்று இடம்பெற்ற போட்டியில் மதீஷ பத்திரணவின் சிறந்த பந்துவீச்சில் மூலம் சென்னை அணி வெற்றியை பதிவு செய்துள்ளது.
இலங்கை வீரர் மதீஷ பத்திரண கைப்பற்றிய 4 விக்கட்டுக்களே சென்னை அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது.
இந்நிலையில் அணித் தலைவர் ருத்துராஜ் கய்க்வாட், வாட்ஷிவம் டுபே ஆகியோர் சிறந்த ஆரம்பத்தை அணிக்கு பெற்றுக்கொடுக்க, மஹேந்ர சிங் தோனி இறுதியில் ஆட்டத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
ரோஹித் ஷர்மா
மும்பை சார்பாக துடுப்பாட்டத்தில் ரோஹித் ஷர்மா தனி ஒருவராக நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் பெற்ற போதிலும் மும்பை அணி தோல்வியை சந்தித்திருந்தது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கட்களை மாத்திரம் இழந்து 206 ஓட்டங்களைக் பெற்றுக்கொண்டது.
ஆரம்ப வீரர் அஜின்கியா ரஹானே 2ஆவது ஓவரில் 5 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தபோது சென்னை சுப்பர் கிங்ஸ் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
ஆனால், ரச்சின் ரவிந்த்ரா (21), ருத்துராஜ் கய்க்வாட் ஆகிய இருவரும் 2ஆவது விக்கட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு வலுசேர்த்தனர்.
தொடர்ந்து ருத்துராஜ் கய்க்வாடும் ஷிவம் டுபேயும் 3ஆவது விக்கட்டில் 45 பந்துகளில் 90 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார்.
தோனியின் துடுப்பாட்டம்
ருத்துராஜ் கய்க்வாட் 40 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 69 ஓட்டங்களைக் பெற்றுக்கொண்டார். டெரில் மிச்செல் 17 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
இதனிடையே ஜஸ்ப்ரிட் பும்ரா 19ஆவது ஓவரை மிகக் சிறப்பாக வீசி 7 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்தார்.
My dear Thala! ⬅️⬇️➡️ ? ? #MIvCSK #WhistlePodu ??
— Chennai Super Kings (@ChennaiIPL) April 14, 2024
pic.twitter.com/Hn3Kg2c4HW
இதன்படி கடைசி ஓவரை மும்பை அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா வீசினர். அவரது முதல் பந்து அகலபந்தக மாறியது. அடுத்த பந்தை டெரில் மிச்செல் எல்லைக்கோட்டுக்கு அப்பால் வெளியேற்றினார்.
அடுத்த பந்து மீண்டும் அகலபந்தக மாறியது. தொடர்ந்து இரண்டாவது பந்தை அடித்த டெரில் மிச்செல் பிடிகொடுத்து ஆட்டம் இழக்க, தோனி களம் இறங்கினார்.
மீதம் இருந்த 4 பந்துகளில் முதல் 3 பந்துகளை தோனி தொடர்சியாக 6ஓட்டங்களாக அடிதாடினார். கடைசிப் பந்தில் இரண்டு ஓட்டங்களை பெற்றுக்கொண்ட அவர் 4 பந்துகளில் 20 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
அவரது இந்த அதிரடி ஆட்டமே சென்னை அணியின் ஆட்டத்தின் போக்கை மாற்றி அமைத்தது.
மறுபக்கத்திலிருந்து துடுப்பெடுத்தாடிய ஷிவம் டுபே 38 பந்துகளில் 10 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 66 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் ஹார்திக் பாண்டியா 43 ஓட்டங்களுக்கு 2 விக்கட்களைக் கைப்பற்றினார். சென்னை சுப்பர் கிங்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கண 207 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கட்களை இழந்து 186 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.
ஆட்டநாயகனாக தெரிவு
ஆரம்ப வீரர்களான ரோஹித் ஷர்மாவும் இஷான் கிஷனும் மிகத் திறமையாகவும் அதிரடியாகவும் துடுப்பெடுத்தாடி 43 பந்துகளில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது கிஷான் 23 ஓட்டங்களுடன் மதீஷ பத்திரணவின் முதல் பந்தில் ஆட்டம் இழந்தார்.
அடுத்து களம் இறங்கிய சூரியகுமார் யாதவ் பத்திரணவின் 3ஆவது பந்தில் ஓட்டம் பெறாமல் வெளியேறினார். எனினும் ரோஹித் ஷர்மாவும் திலக் வர்மாவும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கட்டில் 38 பந்துகளில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.
அதன் பின்னர் திலக் வர்மா மதீஷ பத்திரணவின் பந்துக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். திலக் வர்மா 20 பந்துகளில் 5 பவுண்டறிகளுடன் 31 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில் அணியின் ஓட்ட எண்ணிக்கை 134 ஓட்டங்களாக இருந்தபோது மும்பை அணித் தலைவர் ஹார்திக் பாண்டியாவின் விக்கட்டை தேஷ்பாண்டே கைப்பற்றியிருந்தார்.
அதன் பின்னர் களமிறங்கிய டிம் டேவிட் 5 பந்துகளில் 2 சிக்ஸ்களுடன் 13 ஓட்டங்களைப் பெற்று, முஸ்தாபிஸுர் ரஹ்மானின் பந்துவீச்சில் வெளியேறினார்.
மேலும், ஒரு ஓட்டம் பெற்றிருந்த ரொமாரியோ ஷெப்பர்டின் விக்கட்டை மதீஷ பத்திரண நேரடியாக கைப்பற்றினார்.
ஒரு பக்கத்தில் விக்கட்கள் பறிகொடுத்து மும்பை ஆணி விளையாட மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ரோஹித் ஷர்மா 63 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகள், 5 சிக்ஸர்கள் அடங்கலாக 105 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் மதீஷ பத்திரண 4 ஓவர்களில் 28 ஓட்டங்களுக்கு 4 விக்கட்களை வீழ்த்தியதன் காரணமாக ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |