இலங்கையில் 12 பேருடன் பயணித்த பெல் 212 ரக உலங்கு வானூர்தி விபத்து - 6 பேர் பலி
இன்று காலை உலங்கு வானூர்தி விபத்தில் சிக்கிய நிலையில் அதிலிருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆயுதம் தரித்த 2 விமானப்படை வீரர்கள் மற்றும் 3 சிறப்பு படை வீரர்கள் உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் இணைப்பு
ஹிங்குராக்கொட விமானப்படை தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட பெல் 212 ரக உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளாகியுள்ளது.
உலங்கு வானூர்தி மாதுருஓயா நீர்த்தேக்கத்தில் விபத்துக்குள்ளானதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் உறுதி செய்துள்ளார்.
வானூர்தி விபத்து
விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமானப்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
சிலர் காயமடைந்துள்ளதாகவும், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இரண்டு விமானிகள் உட்பட 12 பேர் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri
