தொடருந்திலிருந்து தவறி விழுந்த இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!
கொழும்பில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த “காலி குமரி” தொடருந்தில் பயணித்த இளைஞர் ஒருவர் தவறி விழுந்ததில் அவரது இரு கால்களும் துண்டானதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து சம்பவம் இன்று (11) மாலை இடம்பெற்றுள்ளது.
மிரிஸ்ஸ உடுப்பில பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய இளைஞரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.
துண்டான இளைஞனின் கால்கள்
குறித்த தொடருந்து காலி தொடருந்து நிலையத்தை வந்தடைந்த போது, அவர் தள்ளப்பட்டதில் தொடருத்தில் இருந்து தவறி விழுந்ததாக தொடருந்து நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தொடருந்து நின்றதும் அங்கிருந்தவர்கள் அவரை தொடருந்து நடைமேடைக்கு அழைத்துச் சென்றறுள்ளனர்.
ஆனால் அதற்குள் அவரது இரண்டு கால்களும் முற்றிலும் துண்டாகியதாக தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் “1990 சுவசெரிய” நோயாளர் காவுவண்டி ஊடாக அவர் கராப்பிட்டிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.





அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri
