பாலஸ்தீனியர்கள் காசா நகரை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவிப்பு
பாலஸ்தீனியர்கள் காசா நகரை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை என இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் அவிச்சாய் அட்ரே தெரிவித்துள்ளார்.
காசா நகரை கட்டுப்பாட்டில் எடுக்கும் இஸ்ரேலின் சமீபத்திய நடவடிக்கை குறித்து எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
காசா நகரில் இருந்து வெளியேறி தெற்கு நோக்கி செல்லும் பாலஸ்தீனியர்களுக்கு மனிதாபிமான உதவிகள் அதிக அளவில் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர்
மேலும் அப்பகுதிகளில் கூடாரங்கள் அமைப்பது, தண்ணீர் வசதிகளை உருவாக்குவது போன்ற ஏற்பாடுகளை இஸ்ரேலிய படை தொடங்கி விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் காசாவின் தெற்கு பகுதியில் இடப்பற்றாக்குறை இருப்பதாக வெளியாகும் வதந்திகள் முற்றிலும் தவறான தகவல் என்றும் அவிச்சாய் அட்ரே தெரிவித்துள்ளார்.
மோசமடையும் பாலஸ்தீனியர்களின் நிலை இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தாக்குதலில் இதுவரை பெண்கள் குழந்தைகள் உட்பட 62,895 பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri

ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam

அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam
