தென்னிலங்கையை உலுக்கிய படுகொலைகளின் பின்னணி
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியஅத்த நுழைவாயிலுக்கு அருகில் அபே ஜனபால கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட ஐவர் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த கொலைகளுக்கு டுபாய் நாட்டில் வாழும் கொஸ்கொட சுஜீ என்ற பாதாள உலக தலைவரே தலைமை தாங்கியதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்துருவ றோயல் பீச் ஹோட்டலின் உரிமையாளரான அபே ஜனபால கட்சியின் தலைவர் சமன் பிரசன்ன பெரேராவை கொலை செய்வதற்கு இதற்கு முன்னரும் ஒருவரை கொஸ்கொட சுஜி, நியமித்திருந்தார் என தெரியவந்துள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்
சமன் பிரசன்ன நொடிப்பொழுதில் உயிர் பிழைத்ததாகவும், அவரது வெளிநாட்டு முதலீட்டாளர் சுடப்பட்டு காயமடைந்ததாகவும் பாதாள உலகத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எஸ்.டி.எப் நந்துன் என்பவர் இருந்த காலத்திலிருந்து கொஸ்கொட சுஜீக்கும், சமனுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
சுஜீயின் எதிரிகளான கொஸ்கொட தாரக உள்ளிட்ட பாதாள உலகக் கும்பல்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தமையினால், அரசியலுக்கு வருவதற்கு முன்னரே, சமன் இலக்கு வைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சர்வதேச சிவப்பு அறிவித்தல்
இதற்கு முன்னர் இடம்பெற்ற கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் டுபாயில் தலைமறைவாக உள்ள கொஸ்கொட சுஜீயை இலங்கைக்கு அழைத்து வர குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சர்வதேச சிவப்பு அறிவித்தல் விடுக்க நடவடிக்கை எடுத்திருந்தது.
2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் திகதி தங்கல்ல அசேல என்ற போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக சாட்சியமளித்தவரை கொலை செய்த சந்தேக நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக சமன் மீது குற்றம் சாட்டப்பட்டது.
2022ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 24 ஆம் அன்று, அவர் பொலிஸார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சமன் பெரேராவுக்குச் சொந்தமான டிபென்டரில் அந்த 5 பேரும் சம்பவ வழக்கில் பங்கேற்க வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.