பெலியத்தை ஐவர் படுகொலை சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது
தங்காலை, பெலியத்தை பிரதேசத்தில் ‘அபே ஜனபல’ கட்சித் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட 5 பேர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலி - ரத்கம பிரதேசத்தில் வைத்து 30 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
தங்காலை, பெலியத்தை பிரதேசத்தில் கடந்த திங்கட்கிழமை (22) காலை 8.30 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றிருந்தது.
இந்த சம்பவத்தில் அபே ஜனபல’ கட்சித் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்திருந்தனர்.
இதனைத்தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மாத்தறை, கம்புறுப்பிட்டி பிரதான வீதியில் கம்புறுப்பிட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில், துப்பாக்கிச்சூடு நடத்த வந்த ஜீப் வாகனத்தில் பயணித்தவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் வாகனத்தில் இருந்து இறங்கிச்செல்லும் CCTV காட்சியை பொலிஸார் விசாரணைகளில் கண்டுபிடித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |