வவுனியா நீதிமன்றில் முன்னிலையான பெக்கோ சமனின் மனைவி
கடவுச் சீட்டு மோசடி தொடர்பில் பலத்த பாதுகாப்புடன் பெக்கோ சமனனின் மனைவி வவுனியா நீதிமன்றில் இன்று (10.11) முன்னிலைப்படுத்தப்பட்டார்.
பாதாள உலக குழுத தலைவரான பெக்கோ சமன் மற்றும் அவரது மனைவி ஷாதிகா லக்ஷனி உள்ளிட்ட 6 பேர் அண்மையில் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
விளக்கமறியல் நீடிப்பு
இந்நிலையில், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிராந்திய அலுவலக அதிகாரி ஒருவர் ஊடாக கடவுச் சீட்டு மோசடியில் ஈடுபட்டதாக பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷகி மீது வழக்கு தாக்கல செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணைக்காக கடும் பொலிஸ் பாதுகப்புடன் அவர் வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
குறித்த வழக்கானது எதிர்வரும் 24 ஆம் திகதிக்க ஒத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், அவரது விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |