சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கைக்குழுவின் பேச்சு ஆரம்பம்
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கைக் குழு பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.
நிதி அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவினர், வொஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையகத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவை நேற்று சந்தித்தனர்.
ஒரு நிலையான தீர்வை அடைவதில் இலங்கையுடன் இணைந்து பணியாற்றச் சர்வதேச நாணய நிதியம் சாதகமாகவுள்ளது என இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நிலைமையைத் தணிக்க நிதியமைச்சர் ஏற்கனவே எடுத்துள்ள நடவடிக்கைகளைச் சர்வதேச நாணய நிதியம் பாராட்டியதாகவும் அறியமுடிகிறது.
மேலும், இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி பற்றிய கலந்துரையாடல்கள் குறித்தும் இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறவிருந்த குறித்த கலந்துரையாடலுக்காக நிதி அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் வொஷிங்டன் நோக்கிப் பயணமாகி இருந்தனர்.
மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன உள்ளிட்ட குழுவினரே இவ்வாறு பயணமாகினர். இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் நேற்று ஆரம்பமானது.
இதில் சர்வதேச நாணய நிதியம், 3 பில்லியன் அமெரிக்க டொலரைக் கடனாக வழங்கும் என
எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க முன்னராக
நம்பிக்கை வெளியிட்டிருந்த நிலையில், நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்
பிரகாரம், இலங்கையுடன் இணைந்து பணியாற்றச் சர்வதேச நாணய நிதியம் சாதகமாகவுள்ளது
எனவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
