ஐக்கிய மக்கள் சக்தியின் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி சுதந்திர சதுக்கத்தை வந்தடைந்தது (Video)
புதிய இணைப்பு
ஐக்கிய மக்கள் சக்தியினரின் ஆர்ப்பாட்ட பேரணி தற்போது சுதந்திர சதுக்கத்தினை அடைந்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியினரின் பிரதான மே தின கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் தற்போது சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பமாகவுள்ளது.
முதலாம் இணைப்பு
ஐக்கிய மக்கள் சக்தியினரின் ஆர்ப்பாட்ட பேரணியானது தற்பொழுது கொழும்பு - கொலன்னாவை பகுதியிலிருந்து ஆரம்பமாகியுள்ளது.
கொலன்னாவை பகுதியில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம் இன்று மாலை கொழும்பு - டெம்பிள் மைதானத்தில் நிறைவடையவுள்ளது.
இவ்வார்ப்பாட்டத்தில் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியினரின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளார்கள்.
கொழும்பு - கொலன்னாவையில் ஆரம்பமான இந்த பேரணி தெமட்டகொடை, பேஸ்லைன், மற்றும் பொரல்லை வழியாகக் கொழும்பு - டெம்பிள் மைதானத்தை அடையவுள்ளது.
இவ் ஆர்ப்பாட்ட பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் இணைத்துள்ளதுடன், இப்பேரணியில் கலந்து கொள்ளப் பல பகுதியிலிருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக வருகை தந்துகொண்டிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 21 மணி நேரம் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
