கட்டுநாயக்க விமான நிலையத்தில் அழகுக்கலை நிபுணரொருவர் கைது
சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டு வந்த நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றையதினம் (22) இடம்பெற்றுள்ளது.
விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடவத்தை சூரியபாலுவ பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய அழகுக்கலை நிபுணர் ஒருவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தனது பயணப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5 இலட்சம் மதிப்புடைய 10,000 "பிளாட்டினம்" வகை சிகரெட்டுகள் அடங்கிய 50 கார்ட்டூன்களை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர்
குறித்த சந்தேகநபர் நேற்று பிற்பகல் 03.30 மணியளவில் 8D-824 என்ற ஃபிட்ஸ் எயார் விமானம் மூலம் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

மேலும், சந்தேகநபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 25ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri