நிலவும் மழையுடனான காலநிலை: அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் எச்சரிக்கை
நுவரெலியாவில் மழையுடனான காலநிலை நிலவுவதால் வீதி விபத்துக்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சில பகுதிகளில் வீசும் கடும் காற்று காரணமாக மரத்தின் கிளைகள் முறிந்து வீழ்ந்து போக்குவரத்து பாதிப்புக்களும் ஏற்பட்டுள்ளன.
ஹட்டன் - கொழும்பு மற்றும் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதிகளில் அடிக்கடி பனிமூட்டம் காணப்படுகின்றன.
வாகனசாரதிகள் அவதானம்
வளைவுகள் நிறைந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் பனி மூட்டம் காணப்படும் வேளையில் தங்களுடைய வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிர செய்ய வேண்டும்.
மேலும், தங்களுக்கு உரித்தான பக்கத்தில் பயணிப்பதன் மூலம் விபத்துக்களை தவிர்த்து கொள்ளலாம் என பொலிஸார் அறிவுத்தியுள்ளனர்.

இரவு நேரங்களில் மழையுடன் கடும் காற்று வீசுகின்றமையால் மரங்களுக்கு சமீபமாக இருப்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அனர்த்த எச்சரிக்கை
கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளது.

எனவே அபாயம் நிறைந்த பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்களுக்கு தொடர் அச்சுறுத்தல் |
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 10 மணி நேரம் முன்
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam