தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்களுக்கு தொடர் அச்சுறுத்தல்

Tamils Sri Lanka Politician Sri Lanka Sri Lankan Peoples
By Kumar Jul 06, 2022 11:45 AM GMT
Report

கிழக்கில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்களுக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுவருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று(6) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர் அச்சுறுத்தல்

"தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வாகரை அமைப்பாளர் காளிராசா சதீஸின் வீட்டிற்கு நேற்று காலை 6 மணிக்கும் பின்னர் காலை 11 மணிக்கும் இரு தடவைகளில் முறையே புலனாய்வு பிரிவினரும் பொலிஸாரும் சென்று கடுந்தொனியில் விசாரணை செய்துள்ளனர்.

இன்று கரும்புலிகள் நாள் அதன் நினைவாக மாவீரர் பெற்றோருக்கு உலர் உணவு கொடுப்பதற்காக தருமலிங்கம் சுரேஷ் கதிரவெளிக்கு வர இருப்பதாகவும் நினைவேந்தல் செய்யவிருப்பதாகவும் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக அச்சுறுத்தியுள்ளனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்களுக்கு தொடர் அச்சுறுத்தல் | Continual Threats Activists Tamil National People

இதனை தமிழ் தேசிய முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது. அண்மைக்காலமாக எமது உறுப்பினர்களும் செயற்பாட்டாளர்களும் நேரடியாகவும் தொலைபேசியூடாகவும் அச்சுறுத்தப்படுகின்றார்கள்.

கடந்த 4 ஆம் திகதி அன்று எமது வவுனதீவு செயற்பாட்டாளர் பிரதீபன் அவர்களும் புலானாய்வுப்பிரிவினரால் அச்சுறுத்தப்பட்டார்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக எந்தவிதமான விட்டுக்கொடுப்பும் இல்லாமல் குரலெழுப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பின்னால் மக்கள் அணிதிரண்டுள்ள நிலையில் அதனை சிதைப்பதற்காக இவ்வாறான அச்சுறுத்தல்களை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

வழமைபோன்று இம்முறையும் யூலை 5 இல் குண்டு வெடிக்கும், தாக்குதல் நடக்கும் என்ற கதையை கட்டியுள்ளனர். தங்களுடைய நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக இவ்வாறான பொய்களை கூறிவருவது வரலாறாகும்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்களுக்கு தொடர் அச்சுறுத்தல் | Continual Threats Activists Tamil National People

முன்னாள் விடுதலை புலிகளின் பெற்றோர் உறவினர்கள் இந்த மண்ணில்தான் வாழ்கின்றனர்.

நாம் பொறுப்புள்ள ஒரு மக்கள் இயக்கம் என்ற அடிப்படையில் அவர்களின் வாழ்வாதாரம் பற்றியும் அவர்களின் அடிப்படை பிரச்சினை தொடர்பாகவும் கவனம் எடுத்து வருகின்றோம்.

மக்களின் இன்னல்கள்

இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் வடக்கு, கிழக்கிலுள்ள மக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அனர்த்தங்கள் வருகின்றபோது புலம்பெயர் தேசத்திலுள்ள மக்களுக்கு உதவுவது வழமை.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்களுக்கு தொடர் அச்சுறுத்தல் | Continual Threats Activists Tamil National People

அவ்வாறு கிடைக்கின்ற சிறியளவிலான உதவிகளை கொடுக்காமல் தடுப்பதன் நோக்கம் என்ன? மேலும் மக்களை பட்டினியால் சாகடிக்கவா? “என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US