அதிகரிக்கும் ஆபத்து! உடலில் இவ்வாறான அடையாளம் தென்பட்டால் எச்சரிக்கையாக இருக்கவும்
இலங்கையில் அண்மைக்காலமாக தொழுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவசரமாக சுகாதார ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
அந்த பணியகம் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
சுமார் 1,500 தொழுநோயாளிகள்
அந்த அறிக்கையில், உடலில் இனங்காணப்படாத புதிய அடையாளங்கள் அல்லது புள்ளிகள் தென்பட்டால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இதேவேளை, இலங்கையில் வருடாந்தம் சுமார் 1,500 தொழுநோயாளிகள் இனங்காணப்படுவதாகவும் அவர்களில் 40 சதவீதமானோர் மேல் மாகாணத்தில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 15 சதவீதமான நோயாளிகள் குழந்தைகள் என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
மக்களிடம் கோரிக்கை
இதேவேளை, உங்களின் உடலில் இவ்வாறான அடையாளங்கள் இருப்பது தொடர்பில் ஏதேனும் சந்தேகம் இருப்பின், தேசிய வைத்தியசாலையின் மத்திய தொழுநோய் சிகிச்சை நிலையத்தின் 075 4088604 என்ற இலக்கத்திற்கு வாட்ஸ்அப் செய்தியை அனுப்புமாறு அந்த அறிக்கையின் ஊடாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அந்த செய்தியில், நன்கு வெளிச்சம் உள்ள இடத்தில் எடுக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான இடத்தின் தெளிவான புகைப்படம், வயது, பாலினம், நீங்கள் வசிக்கும் இடம், எவ்வளவு காலம் அந்த புள்ளி அல்லது அடையாளம் உள்ளது எனவும், மற்றும் பிற தொடர்புடைய அறிகுறிகள் (அரிப்பு, எரிச்சல், வலி) தொடர்பான தகவல்கள் குறிப்பிடப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தம் - ரணில் வகுக்கும் வியூகம் 23 மணி நேரம் முன்

மேகன் உடனான திருமண உறவில் ஹரி நீடிக்க காரணம் இது தான்: அரச குடும்ப சேவகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri

ஜீ தமிழ் சரி கம பா நடுவர் கார்த்திக்கின் மனைவி, பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம் Cineulagam

கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்! நிரூபர்களுக்கு அளித்த நக்கலான பதிலால் சர்ச்சை Manithan

23 வயது நடிகையை காதலிக்கும் ஷாலினி அஜித்தின் சகோதரர் ரிச்சர்ட்! வைரலாகும் ஜோடியின் போட்டோ Cineulagam

ஐபிஎல் இறுதிப்போட்டி மாற்றம்... பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு: அதிர்ச்சியில் சென்னை ரசிகர்கள் News Lankasri
