மட்டக்களப்பில் பெண் ஒருவர் கொலை வழக்கு : 3 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

Batticaloa Crime Law and Order
By Bavan Sep 30, 2026 04:35 AM GMT
Report

மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் கடத்தப்பட்டு தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு கிணற்றில் வீசி எறிந்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கணவன் மனைவி மற்றும் கணவனின் சகோதரன் உட்பட 3 பேருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கானது நேற்றுமுன்தினம்(28.09.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே எதிர்வரும் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள்

கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் இருந்து வவுணதீவு கொத்தியாவல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது இளம் தாய் ஒருவர் மற்றும் 3 வயது 4 மாதம் கொண்ட சிறுமி ஒருவர் உயிருடனும் மீட்கப்பட்டனர்.

மேலும் ஏற்கனவே காணாமல் போனதாகக் கருதப்பட்ட மற்றொரு பெண் ஒருவர் சடலமாக கிணற்றில் இருந்து மீட்கப்பட்டார்.

மட்டக்களப்பில் பெண் ஒருவர் கொலை வழக்கு : 3 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு | Batticaloa Women S Murder Case Remand Extended

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தினவின் நேரடி கண்காணிப்பில் கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் அதிரடி விசாரணை முன்னெடுத்தனர்.

இதன்போது மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு நித்திரைக்கு வழங்கும் மாத்திரைகளை பழச்சாற்றில் கொடுத்து கடத்தி கொலை செய்து கொள்ளையிட்டு வந்த சூத்திரதாரிகளான காஞ்சிரம்குடா பகுதியைச் சேர்ந்த கொள்ளை குழுவினரான வெற்றிவேல் சதீஸ்வரன் அவருடைய 26 வயதுடைய மனைவி சோமசுந்தரம் சர்லியா மற்றும் கணவனின் சகோதரனான 22 வயதுடைய வெற்றிவேல் தனோஜன் ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க ஆபரணங்களை கொள்வனவு செய்த ஊறணி, திருகோணமலை, வீதிகளைச் சேர்ந்த இரு நகைக்கடை உரிமையாளர்கள் இருவர் உட்பட 5 பேரை  பொலிஸார் கைது செய்தனர். 

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் கடந்த 22ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து அவர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் கொள்ளையர்களிடம் இருந்து தங்க ஆபரணங்களை கொள்வனவு செய்த இரு கடை உரிமையாளர்கள்; மயக்க மருந்து ஸ்பிரேயர் வைத்திருந்த ஆட்டோ சாரதி மற்றும் (பாமசி) உரிமையாளர் உட்பட 4 பேரையும் நீதிமன்ற பிணையில் வெளிவந்ததுடன் கொள்ளையர்களான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும் தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டனர். 

வழக்கு விசாரணை

இதில் கைது செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு எதிராக கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு 3 குற்றச்சாட்டின் கீழ் முதலாவது குற்றமான மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் பெண் ஒருவருக்கு மயக்க மாத்திரை கலந்து யூஸ் கொடுத்து அவரின் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட கணவன் மனைவிக்கும்

மட்டக்களப்பில் பெண் ஒருவர் கொலை வழக்கு : 3 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு | Batticaloa Women S Murder Case Remand Extended

இரண்டாவது குற்றமான பழுகாமத்தில் பெண் ஒருவருக்கு மயக்க மாத்திரை கலந்து யூஸ் கொடுத்து கடத்தி சென்று தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு அவரை கொக்கட்டிச்சோலை செல்லிக்காடு வயல் பிரதேசத்தில் உள்ள கிணறு ஒன்றில் வீசி கொலை செய்த கணவன் மனைவிக்கும்.

மூன்றாவது குற்றமான வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த இளம் தாய் அவரது 3 வயது 4 மாதம் கொண்ட குழந்தைக்கு மயக்க மாத்திரை கலந்த யூஸ் வழங்கி முச்சக்கரவண்டியில் கடத்தி சென்று தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு இளம் தாயை ஏற்கனவே பெண் ஒருவரை கடத்தி கொள்ளையிட்டு கிணற்றில் வீசி கொலை செய்த அதே கிணற்றில் அவரை வீசியதுடன் அவரது குழந்தையை சதுப்பு நிலப்பகுதியில் தனியாக விட்டு சென்ற கணவன் மனைவி மற்றும் கணவனின் சகோதரனுக்கு எதிராக பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர்.

இதன் பிரகாரம் குறித்த வழக்கு விசாரணைக்காக கடந்த 28ஆம் திகதி திங்கட்கிழமை திறந்த நீமிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டதையடுத்து நீதவான் 3 பேரையும் 12ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

குடும்பத்துடன் சென்ற வர்த்தகர் கொடூரமாக தாக்கப்பட்டு கடத்தல் - மனைவி காயம் - தப்பிய மகள்கள்

குடும்பத்துடன் சென்ற வர்த்தகர் கொடூரமாக தாக்கப்பட்டு கடத்தல் - மனைவி காயம் - தப்பிய மகள்கள்

இலங்கை மத்திய வங்கியின் நாணயக்கொள்கை மாற்றம் தொடர்பில் முக்கிய தீர்மானம்

இலங்கை மத்திய வங்கியின் நாணயக்கொள்கை மாற்றம் தொடர்பில் முக்கிய தீர்மானம்

மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US