கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் பெத்தான்குடித் திருவிழா (photos)
கிழக்கில் தேரோடும் கோயில் எனப் புகழ்பெற்ற மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் 7ஆம் நாள் திருவிழா பெத்தான்குடி மக்களினால் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
ஆலயத்தின் 7ஆம் நாள் திருவிழா நேற்று (04) இரவு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
வசந்த மண்டப பூஜைகள்
ஆலய பிரதம குரு மு.கு.சச்சிதானந்தக் குழுக்கள் தலைமையில் நடைபெற்ற இத்திருவிழாவில் மூல மூர்த்தியாகிய தான்தோன்றீஸ்வரருக்கும், கொடித் தம்பத்திற்கும் பூஜைகள் நடைபெற்று பின்னர் வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்றன.
ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் உள்வீதி வலம் வந்ததைத் தொடர்ந்து, தான்தோன்றீஸ்வரர் உமாதேவியர் சமேதராய் விசேடமாக அமைக்கப்பட்ட சப்புறத்திலும், பிள்ளையார் மூசுக வாகனத்திலும், முருகன் வள்ளி தெய்வானை சமேதராய் மயில் வாகனத்திலும், விஷ்னுபகவான் குதிரை வாகனத்திலும், சண்டேசுவரர் எருது வாகனத்திலும். மேள தாள வாத்தியங்கள் முழங்க சுவாமிகள் வெளி வீதி வலம் வந்து திருவிழா நடைபெற்றது.
தொடர்ந்து நடைபெறும் திருவிழா
ஆலய தலைவர் இ.மேகராசா தலைமையில் நடைபெற்ற இத்திருவிழாவில் பெத்தான்குடி மக்களின் தலைவர் மு.அருட்செல்வம், ஆலய நிருவாகிகள், உள்ளிட்ட பல நூற்றுக்கணக்கான மக்கள் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
ஆலயத்தின் கொடியேற்றம் கடந்த 29.08.2044 அன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றது.
தேரோட்டம் எதிர்வரும் 11.09.2022 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் நடைபெற்வுள்ளதுடன் அன்றையதினம் இரவு 7 மணியளவில் திருவேட்டை இடம்பெற்று, மறுநாள் 12.09.2022 அன்று காலை 6 மணியளவில் தீர்த்தோற்சவத்துடன் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
![Gallery](https://cdn.ibcstack.com/article/331aacb7-c426-4e1c-9665-3c7a2825aaf8/22-63167e3a63ef8.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/aa18b20d-48ca-4059-b1fa-8d9f977802d2/22-63167e3a9d41c.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/7e4980a0-52e4-40ca-8d90-326f41f7a78c/22-63167e3ad6964.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/d083a207-5ef8-458c-91f1-146b813f1a57/22-63167e3b228ba.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/0df9f51b-a652-420a-bd6b-0e3ddb93042f/22-63167e3b5bcda.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/ae176386-0537-4340-a695-e1d32e8cc65e/22-63167e3b9339a.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/f2b670ae-3413-4d3a-a224-e571c022ea07/22-63167e3bcb4a1.webp)
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 2 நாட்கள் முன்
![வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்?](https://cdn.ibcstack.com/article/6da58c7c-2324-4cb5-a9bb-9e9de56eb1b7/25-67ab23c613b2e-sm.webp)
வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்? News Lankasri
![புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு](https://cdn.ibcstack.com/article/6287e505-7107-449a-b1a8-76c95abee052/25-67ab40f0969e8-sm.webp)