11 நாட்களில் 1300 கீலோ மீற்றர் தூரம் பயணித்த இளைஞர்கள் (PHOTOS)
“கடலோரத்தினை பிளாஸ்ரிக் பொருட்களில் இருந்து பாதுகாத்து தூய்மைப்பபடுத்துவோம்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இரு இளைஞர்கள் இணைந்து துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தங்களது பயணத்தை ஆரம்பித்திருந்தனர்.
கடந்த முதலாம் திகதி மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட துவிச்சக்கர வண்டி பயணம் திருகோணமலை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், புத்தளம், நீர்கொழும்பு, கிக்கடுவை, ஹம்பாந்தோட்டை, பொத்துவில் ஊடாக நேற்று மட்டக்களப்பில் நிறைவுபெற்றது.
1,300 கிலோ மீட்டர்
இப்பயணம் மொத்தம் 1,300 கிலோ மீட்டர்கள் 11 நாட்கள் கொண்டதாகும்.
களுவாஞ்சிகுடி பழைய மாணவரான அனாமிகன் குமாரசிங்கம் மற்றும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி பழைய மாணவரான சஞ்ஜீவன் அமலநாதன் ஆகிய இரு இளைஞர்களே இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தமது பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
கௌரவிக்கும் நிகழ்வு
இந்நிலையில், விழிப்புணர்வு சைக்கில் ஓட்டத்தில் கலந்து கொண்டு வெற்றிகரமாக அதனை நிறைவு செய்த சைக்கிள் ஓட்டிகளை கௌரவிக்கும் நிகழ்வு எருவில் கண்ணகியம்மன் ஆலய முன்றலில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் காண்டீபன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதன்போது சைக்கிள் ஓட்டிகளை மாலை அணிவித்து வரவேற்றதுடன் நினைவுச் சின்னமாக ஆலய வளாகத்தில் மரக்கண்டு ஒன்று நடப்பட்டது.
இந் நிகழ்வில் ஆலய நிருவாகத்தினர், பிரதேச விளையாட்டுக் கழகத்தினர் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





