மட்டக்களப்பு பொலிஸார் நடாத்திய யுக்திய திட்டத்தின் கீழ் 16 பேர் கைது
மட்டக்களப்பு (Batticaloa) காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸார் நடாத்திய யுக்திய போதை ஒழிப்பு வேலை திட்டத்தின் கீழ் கடந்த 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ். ரமேஷ் தெரிவித்துள்ளார்.
குறித்த சுற்றிவளைப்பின்போது இன்று(23) காலை பெண் ஒருவர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள்
இப்பெண்ணுடன் மேலும், எட்டு பேர் காத்தான்குடி பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தவிர நாவற்குடா, நொச்சிமுனை, கல்லடி பிரதேசங்கலிருந்து சுமார் 40 லீட்டர் கசிப்புடன் எட்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீத மன்றத்தில் இன்று முன்னிலை படுத்தப்பட்டனர்.
இவர்களிடமிருந்து மீட்கப்பட்ட போதைப் பொருள்களும் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
