மட்டக்களப்பில் வெள்ளநீரால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் முன்வைத்துள்ள கோரிக்கை
மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் அண்மையில் பெய்த பலத்த மழை காரணமாக மீண்டும் தாழ்நிலங்ளில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் உரிய வடிகாலமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேங்கியுள்ள வெள்ள நீர்
கடந்த சில தினங்களாகப் பெய்து வந்த பலத்த மழைவீழ்ச்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முனைத்தீவு, பட்டாபுரம், பழுகாமம், கோவில்போரதீவு உள்ளிட்ட பல கிராமங்களிலும், மக்கள் குடியிருப்புக்கள், மற்றும் பொது இடங்கள், வீதிகள், உள்ளிட்ட பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
இதனால், மக்கள் தமது அன்றாட வேலைகளைச் செய்வதில் பல சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே, தேங்கியிருக்கும் வெள்ள நீரை வெளியேற்றுவற்கு உரிய வடிகால் வசதிகளை செய்து தருவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் உடன் முன்வரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |