கூட்டுறவுச் சங்கங்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் விமர்சனம்: எம்.அஸ்மி ஆதம்லெப்பை (photos)

Batticaloa People CooperativeSocieties
By Rusath Feb 25, 2022 04:35 AM GMT
Report

கடந்த காலங்களில் கூட்டுறவுச் சங்களுக்கான அங்கீகாரம் சற்றுக் குறைவாகவே இருந்தது எனவும், மக்கள் மத்தியில் ஒரு விமர்சனத்திற்குரியதாக இருந்தது எனவும் கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருமாகிய எம்.அஸ்மி ஆதம்லெப்பை தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று மாலை இடம்பெற்ற கோப் பிறஸ் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கோப் பிறஸை திறந்து வைத்துவிட்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

மட்டக்களப்பு மாவட்டம் மன்முனை தென் எருவில் களுவாஞ்சிகுடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் கூட்டுறவுச் சங்களுக்கான அங்கீகாரம் சற்றுக் குறைவாகவே இருந்தது. இதற்கு காரணம் நிர்வாகங்களுக்கு இடையில் காணப்பட்ட முரண்பட்ட கருத்துக்களும், மோசடியான சம்பவங்களும், தவறான செயற்பாடுகளுமே, மக்கள் மத்தியில் ஒரு விமர்சனத்திற்குரிய காரணங்களாக இருந்தன.

கூட்டுறவுச் சங்கங்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் விமர்சனம்: எம்.அஸ்மி ஆதம்லெப்பை (photos) | Batticaloa People Cooperativesocieties

இந்நிலையில் கிழக்கு மாகாணத்திலுள்ள சங்கம் ஒன்றிற்கு தலைவராக ஒரு வைத்தியர் ஒருவர் செயற்படுவது பாராட்டுதலுக்கு உரியதாகும்.

அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு தேசிய கொள்கை வேலைத்திட்டத்திற்கமைவாக கூட்டுறவு அதன் தனித்துவமான பயணத்தை நோக்கி எனும் கருப்பொருளில் கிராமத்திற்கு கிராமம் வீட்டுக்கு வீடு எனும் விஷேட வேலைத்திட்டத்தின் கீழ் புதிய கோப்பிறஸ் பல்பொருள் விற்பனை நிலையங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.

கூட்டுறவு சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் வழிகாட்டலில் கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் மாகாணத்திலுள்ள வினைத்திறன் மிக்க தெரிவு செய்யப்பட்ட பலநோக்கு கூட்டுறவு சங்கங்களில் இவ் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

கூட்டுறவுச் சங்கங்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் விமர்சனம்: எம்.அஸ்மி ஆதம்லெப்பை (photos) | Batticaloa People Cooperativesocieties

கிழக்கு மாகாணத்திலே கூட்டுறவுச் சங்கங்களின் வளர்ச்சியை ஒரு தனித்துவமானதாகக் கொண்டு செல்ல வேண்டும் என்ற அடிப்படையில், திணைக்களம் பல்வேறு விதமான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிட்டிருக்கின்றோம்.

அந்த வகையில் அந்த அந்த சங்கங்களுக்கு ஏற்ற வகையில் திட்டங்ககளை வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ளோம். அதுபோல் இச்சங்கத்திற்கு ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றைப் பெற்றுக் கொடுக்கவுள்ளோம்.

கிழக்கு மாகாணத்தின் கூட்டுறவுச் சங்கங்களின் வளர்ச்சி என்பது ஒரு தனிமனிதனால் மாத்திரம் முடியாது. திணைக்களமும், இயக்குனர் சபையும், ஊழியர்களும், ஒருமித்து செயற்படல் வேண்டும்.

கூட்டுறவுச்சங்கங்கள் வெறுமனே சீனியையும். பருப்பையும் விற்றுக் கொண்டிருக்காமல், அதனுடைய சேவைகளை கல்வி, சுகாதாரம், மற்றும் உல்லாசத்துறை, உள்ளிட்ட பல்துறை சார்ந்ததாக விஸ்தரிக்க வேண்டும்.

கடந்த காலங்களில் நிதியைத் தவறான முறையில் பயன்படுத்திய கூட்டுறவுச் சங்கங்களில் தலைவர்களின் பல பின்னடைவான தீர்மானங்களினால்தான் கூட்டுறவுச் சங்கங்கள் தேல்வியைக் கண்டன.

கூட்டுறவுச் சங்கங்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் விமர்சனம்: எம்.அஸ்மி ஆதம்லெப்பை (photos) | Batticaloa People Cooperativesocieties

நாங்கள் மத்திய அரசிடமிருந்து பெறுகின்ற நிதியை வைத்துக் கொண்டு இவ்வாறான சங்கங்களைப் பலப்படுத்துகின்ற செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றோம்.

அதற்கு ஊழல் மேசடியற்ற செயற்பாடுகளைக் கட்டியெழுப்புவதற்கு சங்கங்களின் இயக்குர் சபைகள் உறுதுணை வழங்க வேண்டும்.

குறிப்பாக ஏனைய திணைக்களங்களிலே கூட்டுறவு சங்கங்கள் தொடர்பான விமர்சனங்கள் கழையப்படல் வேண்டும். அதற்காக பணிப்பாளர் சபையும், ஊழியர்களும், ஏனைய திணைக்களத்தினரோடு சேர்ந்து செயற்பட வேண்டும்.

தற்போது கூட்டுறவு சங்கங்கள் மக்கள் மயப்படுத்தப்பட்டதாக செயற்பட்டு வருகின்றன. அதற்காக வேண்டி கிழக்கு மாகாணம் கூடிய அக்கறை கொண்டு செயற்பட்டு வருகின்றது என சுட்டிக்காட்டியுள்ளார். 

இந் நிகழ்வில் மன்முனை தென் எருவில் பற்று பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன் கருத்து தெரிவிக்கையில்,

பல விடையங்களில் எமது சங்கத்திற்கு ஆதரவுகள் தேவையாகவுள்ளது. கூட்டுறவுச்சங்கங்கள் ஒரு காலத்தில் திருடர்களின் கூடாரமாக ஒரு காலத்தில் முத்திரை குத்தப்பட்டிருந்தது. அந்த கழங்கத்திலிருந்து வெளியில் வர மிக நீண்ட காலமெடுத்திருந்தது.

எமக்காக நாமே என்ற ஒன்றிய வாழ்வியல் தத்தவத்தில் உருவாக்கப்பட்டதே கூட்டுறவாகும். பின்னர் கூட்டுறவுத்துறையின் வீழ்ச்சியும், அதன் எழுச்சியும், வரலாற்றில் எழுதப்பட்டிருக்கின்றது.

ஒரு காலகட்டத்தில் மிகுந்த அடிமட்டத்திற்குச் சென்றிருந்த இந்த கூட்டுறவுத்துறையானது, இந்நாட்டில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளம் பெற்று வருவதை அவதானித்துக் கொண்டிருக்கின்றோம்.

இது நாட்டின் ஏனைய மாகாணங்களில் மீண்டெழுந்திருந்தாலும் எமது கிழக்கு மாகாணத்தில் சற்று தாமதாமாக மீண்டெழுவதைக் காணக்கூடியதாகவுள்ளது. அதே ரீதியில்தான் எமது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச கூட்டுறவுச்சங்கமும் திகழ்கின்றது.

கடந்த 5 வருடத்திற்கு முன்னர் தலைவராக இச்சங்கத்தைப் பொறுப்பேற்றபோது சங்கத்திலுள்ள உத்தியோகஸ்த்தர்களுக்கு மாதாந்த சம்பளத்தைக்கூட வழங்க முடியதா நிலமைதான காணப்பட்டிருந்தது. தற்போது 10 லட்சத்திற்கு அதிகமான நிலுவையான சம்பளத் தொகையை வழங்கி முடித்திருக்கின்றோம்.

தற்போது 80 லட்டசத்திற்கு அதிகமான தொகையை எமது இருப்பாக வைத்துள்ளோம். கடந்த காலங்களில் இயக்காமலிருந்த கிராமிய வங்கிளை இயங்கச் செய்திருக்கின்றோம். அதனூடாக விவசாயக்கடன், சுயதொழில் கடன், அரச உத்தியோகஸ்த்தர்களுக்கான கடன் வசதிகளையும் வழங்கி வருகின்றோம்.

நாம் விரைவில் களுதாவளைப் பகுதியில் எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றை திறப்பதற்கு உத்தேசித்துள்ளோம். இப் பிரதேசத்தில் விவசாய உற்பத்திகள் அதிகம் காணப்பட்டாலும் அதற்குரிய ஒருங்கிணைப்பு இங்கு காணப்படவில்லை, அதனை மேம்படுத்த வேண்டியிருக்கின்றது.

அந்த வகையில் பல விடையங்களில் எமது சங்கத்திற்கு ஆதரவுகள் தேவையாகவுள்ளது. இந்நிலையில் நாம் எதிர்காலத்தில் புதிய பாதையில் வித்தியாசமான சிந்தனைக் கோணத்தில், இங்குள்ள வளங்களைக் கொண்டு திட்டங்களைத் தீட்டவேண்டியவர்களாக இருக்கின்றோம்.

எனவே திணைக்களத்தின் ஆதரவைப் பற்றிக் கொண்டு சங்கங்கள் முன்னேற வேண்டிய காலம் இது. எதிர்காலத்தில் எமது மண்முனை தென் எருவில் பற்று கூட்டுறவுச் சங்கம் எதிர்காலத்தில் வெற்றி நடைபோடும் என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.                

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி. தங்கவேல், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், இயக்குநர் சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Neuilly-Plaisance, France

15 Nov, 2025
நன்றி நவிலல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா, Canada

14 Dec, 2020
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Trappes, France

07 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம்

15 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US