மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம்: பண்ணையாளர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை (Photos)
மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பில் நாளைய தினம் ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் சரியான தீர்மானங்கள் எடுக்கப்படும் என நம்புகின்றோம் அல்லாதுவிட்டால் மாவட்டத்தில் நிர்வாக முடக்கத்தினை செய்யவேண்டிய நிலையேற்படும் என கால்நடை பண்ணையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை பண்ணையாளர்கள் 25நாட்களாகவும் போராடிவரும் நிலையில் இன்றைய தினம் விசேட ஊடகவியலாளர் சந்திப்பினையும் நடத்தியுள்ளனர்.
இன்றைய தினமும் வீதியில் குடும்பமாக இருந்து தமது கோரிக்கையினை வலியுறுத்தி கால்நடை பண்ணையாளர்கள் போராட்டம் நடாத்திவருகின்றனர்.
நாங்கள் நாட்டை கேட்கவில்லை எமது கால்நடைகளை காலம்காலமாக வளர்த்துவரும் எமது நிலத்தினையே கேட்கின்றோம். அதனை வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கையெடுக்கவேண்டும்.
பண்ணையாளர்களும் இந்த நாட்டின் மக்கள்தான்
வானத்தாலேயே வந்து வானத்தாலேயே ஜனாதிபதி செல்கின்றார்.

பதவி விலகல் கடிதத்தில் நீதிபதி சரவணராஜா தெரிவித்துள்ள விடயம்! நீதிபதிக்கே நியாயம் கிடைக்காத இலங்கை(Photos)
மக்களை கண்டு ஏன் அச்சம்கொள்ளவேண்டும். கால்நடை பண்ணையாளர்களும் இந்த நாட்டின் மக்கள்தான் என்பதை அவர் மறந்துவிட்டாரா என்பதே எமது கேள்வியாகும் என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
நாங்கள் போராடிக்கொண்டிருக்கும்போது எங்களது பிரச்சினைகளை கேட்டு தீர்க்கமுடியாதவராக இந்த நாட்டின் ஜனாதிபதி இருப்பது கவலையானது எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
