மட்டக்களப்பு உன்னிச்சை வலது கரை வாய்க்கால் பாலம் திறப்பு விழா
மட்டக்களப்பு மாவட்டம் உன்னிச்சை வலது கரை வாய்க்கால் பாலத்தின் திறப்பு விழா நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது, மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் நமசிவாயம் சத்தியானந்தி தலைமையில் இன்று (13.03.2024) இடம்பெற்றுள்ளது.
அப்பகுதி விவசாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த இப்பாலத்தின் பணிகள் சுமார் 60 லட்சம் ரூபாய் செலவில் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரதம அதிதி
அத்துடன், காலநிலை மாற்றத்தை எதிர்நோக்குவதற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிகழ்ச்சி நிரல் திட்டத்தின் கீழ் இந்த புதிய பாலத்தின் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |