பல வருட போராட்டத்திற்கு பின் நீர்ப்பிரச்சனைக்கு தீர்வு கண்ட பெண்
வவுனியா, செட்டிகுளம் பகுதியில் பல வருடங்களுக்காக வாழ்வாதாரம் மற்றும் குடிநீருக்காக போராடிய பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் நீர்ப்பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துள்ளது.
நீண்டகாலப் பிரச்சனையான வாழ்வாதாரம் மற்றும் குடிநீர் என்பவற்றுக்கு தீர்வு காணும் முகமாக குடிநீர்த் திட்டம் ஒன்று இன்று (13.03.2024) அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்து லண்டனில் வசிக்கும் அற்புதராஜன் விஜயகுமாரி என்பவரின் நிதி உதவியில், ஊடக உறவுகளின் பாலம் அமைப்பின் ஊடாகவே குறித்த குடிநீர்த் திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குழாய்க் கிணறு
வவுனியா மாவட்டம் செட்டிகுளத்தில், இரண்டு பெண் பிள்ளைகளுடன் வசிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று நீண்ட நாட்களாக குடிநீர் பெறுவதில் இடர்பாடுகளை எதிர்நோக்கியுள்ளது.
அத்துடன், வீட்டுத் தோட்டத்திற்கான காணிகள் இருந்தும் நீர் இல்லாமையால், பெண் நாளாந்தம் கூலி வேலைக்கு சென்று தனது இரண்டு பிள்ளைகளையும் கவனித்து தமது ஜீவனோபாயத்தை நடத்திவந்துள்ளார்.
இந்நிலையில், இந்தக் குடும்பத்தின் நீர்ப் பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக மோட்டருடன் கூடிய குழாய் கிணறு மற்றும் நீர் தொட்டி என்பன அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |