இஸ்ரேலுக்கு எதிராக எழும் சர்வதேசம் : சமூக ஊடகங்களில் எதிர்ப்பை வெளியிடும் மக்கள்
பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதல் தீவிரமடைந்து தற்போது, ராஃபா எல்லையில் இஸ்ரேல் கொடூர தாக்குதலை தொடுத்து வருகிறது.
இந்நிலையில், 'All Eyes on Rafah' எனும் வார்த்தையை உலககெங்கிலும் உள்ள மக்கள் மத்தியில் குறிப்பாக பிரபலங்களும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
200 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்பை அழிப்பதற்காக காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது. இதில் 35 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
போர் காரணமாக காசாவுக்குள் நிவாரண பொருட்கள் எதுவும் வரவில்லை. இதனால் உணவு, குடிநீர் தேடி எகிப்து எல்லையான ராஃபாவில் பாலஸ்தீன மக்கள் குவிந்துள்ளனர்.
ராஃபா எல்லையை கடந்துவிட்டால் எகிப்துக்கு சென்றுவிடலாம். ஆனால், எகிப்து பாலஸ்தீன மக்களை அனுமதிக்கவில்லை. இருப்பினும், அம்மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை தேவைகளையும் எகிப்து செய்து வருகிறது.
ராஃபா எல்லையில் தாக்குதல்
உலக நாடுகள் அனுப்பும் மருந்துகளும், உணவும் எகிப்து வழியாக ராஃபா எல்லைக்கு அருகில் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் அண்மையில் இஸ்ரேல் பாதுகாப்புப்படை, ராஃபா எல்லையில் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில், 35 பேர் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு எதிராக உலகம் முழுவழுதும் பிரபலங்கள் மற்றும் மக்கள் கொதித்தெழுந்து வருகிறார்கள்.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளின் உலக சுகாதார அமைப்பு அலுவலகத்தின் இயக்குநர் ரிக் பீபர்கார்ன்தான் முதன் முதலில் இந்த வாக்கியத்தை பயன்படுத்தினார்.
அதனை தொடர்ந்து இந்தியாவின் பிரபல சினிமா நட்சத்திரங்கள், இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் தொடங்கி சர்வதேச பிரபலங்கள் வரை இந்த வார்த்தையை பயன்படுத்த தொங்கியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
