மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் (PHOTOS)
மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை ஆசிரியர்கள் நாளை முதல் சுகவீன விடுமுறைப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
ஆசிரியர்கள் பாடசாலைக்கு முன்பாக இன்று முற்பகல் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
பாடசாலைக்கு முன்பாக இன்று காலை நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது ஆசிரியர்கள் அச்சுறுத்தப்பட்டதுடன் அவமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தே குறித்த போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பாடசாலையின் அபிவிருத்திக்குழுவின் செயலாளர் தனது தனிப்பட்ட நலனுக்காக ஒரு சிலரை இணைத்துக்கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தினை நடாத்தியுள்ளதாகவும் ஆசிரியர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.
ஒரு ஆசிரியர் மீது குற்றச்சாட்டுகள் இருக்குமானால் அதற்காக முறையான விசாரணைகளை நடாத்தி அவருக்கான இடமாற்றத்தினை வழங்கும் வகையான சட்டதிட்டங்கள் இருக்கும்போது ஒட்டுமொத்த ஆசிரியர்களையும் மாணவர்களையும் வீதியிலிறக்க சிலரின் தனிப்பட்ட தேவைக்காக குறித்த போராட்டம் நடாத்தப்பட்டதாக ஆசிரியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தமக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல், அநீதிகளுக்கு எதிரான முறையாக விசாரணை நடாத்தி தீர்வு கிடைக்கும் வரையில் நாளை தொடக்கம் தாங்கள் சுகவீன விடுமுறை போராட்டத்தினை முன்னெடுக்கப்போவதாகவும் ஆசிரியர்கள் இதன்போது எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
மட்டக்களப்பில் பாடசாலை ஒன்றின் முன் பதற்ற நிலை (VIDEO)