மயிலத்தமடு மாதவனையில் அத்துமீறிய குடியேற்றம் - நீதிமன்றம் விடுத்துள்ள அதிரடி உத்தரவு
மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பகுதியில் அரச காணியில் அத்துமீறிய குறியேறியவர்களை வெளியேறுமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்து.
குறித்த உத்தரவை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி அன்வர் சதாத் இன்று (13.11.2023) பிறப்பித்துள்ளார்.
கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள குறித்த அரச காணியில் சட்டவிரோதமாக பெரும்பான்மையின மக்கள் குடியேறியுள்ளவர்கள் வெளியேறதாநிலையில் அவர்களுக்கு எதிராக மாகாவலி அதிகாரசபையின் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பகுதியில் மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான
அரச காணியில் அத்துமீறி குடியேறியதாக தெரிவித்து 13 பேருக்கு எதிராக ஏறாவூர்
நீதிமன்றில் மகாவலி அதிகார சபையினால் கடந்த கடந்த 2023.09.22 அன்று வழக்கு
தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு தீர்ப்புக்காக மன்றுக்கு
எடுக்கப்பட்டிருந்தது.
நீதிமன்றில் முன்னிலை
இதன்போது மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பகுதியில் அத்துமீறி குடியேறியதாக தெரிவிக்கப்பட்ட 13 பேரும் இன்று நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தனர்.
இதனையடுத்து வழக்கு விசாரணை இடம்பெற்றுவந்த நிலையில் அந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி யுத்தத்திற்கு முன்னர் 12 சிங்கள குடும்பங்கள் குடியேறி வாழ்ந்து வந்ததாக முன்வைத்தார்.
சட்டவிரோத குடியேற்ற வாசிகள் அந்த பகுதியில் வாழ்ந்ததற்கான சட்டரீதியான ஆவணங்களை கடந்த 10 ம் திகதி வழங்குமாறு நீதவான் கால அவகாசம் வழங்கிய நிலையில் அவர்கள் அதற்கான ஆதாரத்தை வழங்கவில்லை.
இந்நிலையில், இன்று 13 ம் திகதி குறித்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தார்.
]
இந்நிலையில், அதிகாரிகளின் எந்தவகையான ஆவணமும் நீதிமன்றுக்கு அத்துமீறி
குடியேறியவர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டவர்களினால் சமர்ப்பிக்கப்படாததால்
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் அத்துமீறி குடியோறிய குறித்த 13
பேரையும் வெளியேறுமாறு நீதவான் கட்டளை பிறப்பித்துள்ளார்.
மயிலத்தமடு - மாதவனை பகுதியில் அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களை அகற்றுமாறு கோரி அப்பகுதி கால்நடை பண்ணையாளர்கள் 60வது நாளாகவும் இன்றும் போராட்டம் முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




