கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை: தீவிர விசாரணையில் பொலிஸார்
மட்டக்களப்பு(Batticaloa) வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஓமடியாமடு கிராமத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
63 வயதான ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
குறித்த சம்பவமானது இந்த கொலை சம்பவம் நேற்று(4) இரவு இடம்பெற்றுள்ளது.
தாக்குதல்
இந்த விடயம் தொடர்பில் தெரியவருகையில்,
சகோதரங்களுக்கு இடையில் ஏற்பட்ட கை கலப்பு சண்டையாக மாறியுள்ளது.
அதனை விலக்க சென்ற போதே உயிரிழந்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதுடன் குறித்த நபரின் சகோதரனால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொலிஸ் விசாரணை
மட்டக்களப்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் வாழைச்சேனை நீதவான் நீதிபதி சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை பார்வையிட்டதும் உடல் கூற்று பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |