இராம பிராணால் வழிபடப்பட்ட மாமாங்கேஸ்வரம்! வருடாந்த மஹா கும்பாபிஷேகம்
இராம பிராணால் வழிபடப்பட்ட ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகத்தின் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று ஆயிரக்கணக்கான அடியார்களின் புடைசூழ நடைபெற்றுவருகின்றது.
எதிர்வரும் 02ஆம் திகதி ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.
எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியனவற்றினை ஒருங்கே கொண்ட ஆடி அமாவாசையில் பிதிர்க்கடன் தீர்க்கும் தீர்த்தக்கேணியையும் கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக கிரியைகள் கடந்த 23ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.
இன்று வெள்ளிக்கிழமை (27)தொடக்கம் திங்கட்கிழமை(30) வரையில் அடியார்கள் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
இன்று காலை தொடக்கம் அடியார்கள் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது. இந்த எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வில் இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டுள்ளனர்.
ஆலயத்தின் பிரதமகுருக்கள் மற்றும் சிவாச்சாரியர்கள்,ஆலய வண்ணக்கர்கள் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வினை தொடர்ந்து பக்தர்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வில் பங்கெடுத்துவருகின்றனர்.
02ஆம் திகதி புதன்கிழமை மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.

ரஷ்யாவிற்காக வேறு நாட்டில் நாசவேலையில் இறங்கிய உக்ரேனியர்கள்: பகிரங்கப்படுத்திய பிரதமர் News Lankasri