நியூசிலாந்தில் தாக்குதலை மேற்கொண்டவரின் தாயாரிடம் காத்தான்குடியில் தீவிர விசாரணை
நியூசிலாந்தில் தாக்குதல் நடத்திய நிலையில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி பலியான காத்தான்குடியை சேர்ந்த நபரின் தாயாரிடம் தீவிர விசாரணைகளை இலங்கை புலனாய்வுத் துறையினர் முன்னெடுத்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை தொடக்கம் முப்படையினரும் இணைந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காத்தான்குடியில் பிறந்து 2011ஆம் ஆண்டு நியூசிலாந்திற்கு சென்ற குறித்த இளைஞன் நியூசிலாந்தில் வசித்து வரும் காலத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின்பால் ஈர்க்கப்பட்டார் என்று நியூசிலாந்து அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த நபரின் சொந்த இடமான காத்தான்குடியில் அவருடைய இல்லத்தில் வைத்து அவரின் தாயாரிடம் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறித்த நபரின் தகப்பன் மற்றும் சகோதரர்கள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் தாயார் மட்டும் காத்தான்குடியில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்...
நியூசிலாந்து சூப்பர் மார்க்கெட்டில் பதற்றம் - இலங்கையர் சுட்டுக்கொலை
நியூசிலாந்து தாக்குதல் சம்பவம்! இலங்கையர் தொடர்பான தகவல்களை வழங்குமாறு அரசாங்கம் கோரிக்கை
இலங்கை சமூகம் பொக்கிஷ பகுதியாகும்! நியூசிலாந்து தூதரகம் நெகிழ்ச்சி
வெளிநாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் வாக்குமூலம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
காத்தான்குடி நபரை இரகசியமாக கண்காணித்த நியூசிலாந்து பாதுகாப்பு தரப்பு - தேரர் கூறியுள்ள விடயம்
நியூசிலாந்தில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட காத்தான்குடி நபர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள்



