நியூசிலாந்தில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட காத்தான்குடி நபர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள்

Police Batticaloa New Zealand Auckland
By Kumar Sep 04, 2021 12:15 PM GMT
Report

நியூசிலாந்தில் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடாத்திய நிலையில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டவர் இலங்கை காத்தான்குடியைச் சேர்ந்த 31 வயதுடைய முகமது சம்சூதீன் ஆதில் என அரச புனலாய்வு துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர் இலங்கை சேர்ந்தவர் எனவும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டவர் என அந்த நாட்டு பிரதமர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இவர் தொடர்பாகக் குற்றப் புலனாய்வு பிரிவினர் மற்றும் அரச புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் இவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டார்.

காத்தான்குடி கபூர் கடை வீதியைச் சேர்ந்த அதிபரான சம்சூதீன் முகமது இஸ்மாயில் சரிதா தம்பதிகளுக்கு 1989ஆம் ஆண்டு கடைசி மகனான பிறந்த முகமது சம்சூதீன் ஆதில், ஒரு சகோதரியும் 2 சகோதரன் உட்பட 4 பேரைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்.

ஆதில் ஆரம்பக் கல்வியை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் பயின்று வந்துள்ள நிலையில் நாட்டில் ஏற்பட்ட யுத்த காரணமாக குடும்பத்துடன் 1998ஆம் ஆண்டு ஆதிலுக்கு 8 வயதில் இருக்கும் போது இடம்பெயர்ந்து கொழும்பு மொரட்டுவையில் தங்கியிருந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கொழும்பு - பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் க.பொ.த உயர்தரம் கல்வி கற்று 2006ஆம் ஆண்டு பரீட்சை எழுதிய பின்னர் 2011ஆம் ஆண்டு நியூசிலாந்திற்குச் சென்று குடியேறியுள்ளார்.

இவரின் தந்தையார் மாளிகாவத்தை அல் ஹிதாய பாடசாலையில் 2008 ஓய்வு பெறும் வரை அந்த பாடசாலை அதிபராக கடமையாற்றி வந்து நிலையில் அவரது மகள் கனடாவில் குடியேறி வாழ்ந்து வருவதுடன், அவருடன் கனடாவிற்குச் சென்று குடியேறி வாழந்து வருகின்றார்.

அதேவேளை ஒரு சகோதரன் கட்டாரில் திருமணம் முடித்து வாழ்ந்து வருதாகவும், அடுத்த சகோதரன் சவூதியில் இருப்பதாகவும், கொலன்னாவையில் உள்ள ஆதில் தாயார் சொந்த வீட்டை வாடகைக்குத் தாயார் கொடுத்துவிட்டு தமது காத்தான்குடி கபூர் கடை வீதியிலுள்ள வீட்டில் தாயார் வசித்து வருகின்றார் எனவும் தெரியவருகிறது. 

இந்த நிலையில் குடும்பத்தில் கடைசிப் பிள்ளையான முகமது சம்சூதீன் ஆதில் நியூசிலாந்தில் குடியேறிய பின்னர் அவர் அங்கு பல்வேறு குற்றச் செயல் காரணமாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி வந்துள்ளதை நியூசிலாந்து பொலிஸார் கண்டுபிடித்து அவரை பின் தொடர்ந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அரச புலனாய்வு பிரிவினர் மற்றும் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு

நியூசிலாந்தின், ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு - காத்தான்குடியை சேர்ந்தவர் என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் நேற்று ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடத்தியபோது அவரை பின் தொடர்ந்து வந்த பொலிஸாரால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர் இலங்கையை சேர்ந்தவர் எனவும், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டவர் எனவும் அந்த நாட்டு பிரதமர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு - காத்தான்குடி முதலாம் வட்டாரத்தினை சேர்ந்த முகமட் சம்சுதீன் ஆதில் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

இவர் எட்டு வயதிலேயே கொழும்பிற்கு சென்று அங்கு கொழும்பு இந்துக் கல்லூரியில் கல்வி கற்றுள்ளதாகவும், பின்னர் 2011ஆம் ஆண்டு நியூசிலாந்து சென்றுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி...

நியூசிலாந்து தாக்குதல் சம்பவம்! இலங்கையர் தொடர்பான தகவல்களை வழங்குமாறு அரசாங்கம் கோரிக்கை 

GalleryGalleryGallery
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US