மிக விரைவில் பிரான்ஸுக்கு பயணம் செல்லவுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க..!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எதிர்வரும் ஜூலை 16 ஆம் திகதி பிரான்சுக்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொள்ள உள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் முக்கிய செல்வந்தர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடனான சந்திப்பொன்றை மேற்கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரான்ஸ் பயணம்
இந்தப் பயணத்தின் போது, உலகின் முன்னணி கப்பல் நிறுவனங்களில் ஒன்றான CMA CGM-இன் தலைவர் மற்றும் பிரதம நிர்வாக அதிகாரியான ரோடால்ப் சாடே உடன் ஜனாதிபதி அநுரகுமார சந்திப்பொன்றை நடத்தவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இலங்கையில் முதலீடுகள் மற்றும் வர்த்தக விரிவாக்கல் குறித்து இதன்போது கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் இலங்கையின் வர்த்தகத் துறையில் பிரெஞ்சு முதலீட்டாளர்களை ஈர்ப்பது தொடர்பான முக்கிய கலந்துரையாடல்களிலும் ஜனாதிபதி அநுரகுமார கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் குறித்த பிரான்ஸ் பயணத்துக்கான ஏற்பாடுகளை இலங்கைக்கான பிரெஞ்சு தூதர் ரெமி லம்பேர்ட் மேற்கொண்டுள்ளார்.