நியூசிலாந்து தாக்குதல் சம்பவம்!இலங்கையர் தொடர்பான தகவல்களை வழங்குமாறு அரசாங்கம் கோரிக்கை
நியூசிலாந்தின் ஒக்லாந்தில் உள்ள பல்பொருள் அங்காடியில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரால் கத்தி தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, இந்த சம்பவம் குறித்து நியூசிலாந்து அதிகாரிகளிடம் இருந்து கூடுதல் தகவல்கள் கோரப்பட்டுள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நியூசிலாந்து அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்த விவரங்களை இன்னும் தெரிவிக்காததால், இந்த சம்பவம் குறித்த கூடுதல் தகவலுக்காக காத்திருப்பதாக வெளியுறவு அமைச்சக செயலாளர் அட்மிரல் ஜெயந்த கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்த நியூசிலாந்து புலனாய்வாளர்களின் விசாரணைகளுக்கு தேவையான உதவிகளை வழங்க இலங்கை அதிகாரிகள் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
நியூசிலாந்தின் ஒக்லாந்தில் இடம்பெற்ற தாக்குதலில் 6 நியூஸிலாந்து நாட்டவர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



