இலங்கையிலுள்ள சுப்பர் மார்க்கெட்டுக்குள் பிரித்தானிய கோடீஸ்வரர் ஒருவரின் அதிர்ச்சி தரும் செயல்
காலி, ஹபராதுவ நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் திருட்டில் ஈடுபட்ட பிரித்தானிய பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 23ஆம் திகதி பிற்பகல் 2,590 ரூபாய் பெறுமதியான பொருட்களை திருடிய குற்றச்சாட்டின் கீழ், அவர் ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் Moti Graham Anderson என்ற 65 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
திருட்டு தொடர்பான தகவல்
கடந்த மே மாதம் 26ஆம் திகதி இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளார். சந்தேக நபர் பெரிய வெங்காயம், சொஸேஜ் வகைகள் மற்றும் காய்கறி வகைகளையே திருடியுள்ளார்.

சிசிடிவி காட்சிகளின் ஊடாக இந்தத் திருட்டு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த நபர் இதற்கு முன்னரும் ஒருமுறை சூப்பர் மார்க்கெட்டிலேயே பொருட்களை திருடியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வருவதற்கு முன்னர் இவர் பிரித்தானியாவில் கோடீஸ்வர தொழிலதிபராக இருந்துள்ளார்.
சந்தேக நபர் கைது
இலங்கையில் காணிகளை காணிகளை கொள்வனவு செய்ததாகவும் அந்தக் காணிகள் பறிபோயுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர் கைது செய்யப்படும் போது, இலங்கையில் தங்குவதற்கு அவரிடம் மூன்று மாத விசா இருந்துள்ளது.
இவரது மகன்களில் ஒருவர் பிரித்தானியாவில் கால்பந்து அணியின் அதிகாரப்பூர்வ புகைப்படக் கலைஞராக பணியாற்றி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சூப்பர் மார்க்கெட்டின் முகாமையாளர் ஹபராதுவ பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.