இலங்கை சமூகம் பொக்கிஷ பகுதியாகும்! நியூசிலாந்து தூதரகம் நெகிழ்ச்சி
இலங்கையர் ஒருவரால் ஒக்லாந்தில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் கத்தி தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, ‘நியூசிலாந்தின் இலங்கை சமூகம் அங்குள்ள சமுதாயத்தின் ஒருங்கிணைந்த பொக்கிஷ பகுதியாகும்’ என்று நியூசிலாந்தின், இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
மேற்கு ஒக்லாந்து பல்பொருள் அங்காடியில் குறைந்தது ஆறு பேரை கத்தியால் குத்தி காயப்படுத்திய இலங்கையர் ஒருவர், நியூசிலாந்து காவல்துறையினர் இன்று சுட்டுக் கொன்றனர்.
இந்தநிலையில் "கொழும்பில் உள்ள நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயம், ஒக்லாந்தில் இன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளது.
அதேநேரம் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறியது போன்று குற்றவாளி மட்டுமே இந்த செயல்களுக்கு பொறுப்பேற்கிறார் என்றும், இதில் இனம் அல்லது கலாசாரம் சம்பந்தப்படாது என்றும் உயர்ஸ்தானிகராகம் குறிப்பிட்டுள்ளது.
தொடர்புடை செய்திகள்....
நியூசிலாந்து தாக்குதல் சம்பவம்!இலங்கையர் தொடர்பான தகவல்களை வழங்குமாறு அரசாங்கம் கோரிக்கை
நியூசிலாந்து சூப்பர் மார்க்கெட்டில் பதற்றம் - இலங்கையர் சுட்டுக்கொலை
பிக் பாஸ் வீட்டிற்குள் 24 மணி நேரம் தங்கும் போட்டியாளரின் பெற்றோர்! இந்த வாரம் வெளியேறுவது யார்? Manithan
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam