மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் விபத்து: தாய் மற்றும் மகள் படுகாயம்
மட்டக்களப்பு கல்முனையில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி மற்றும் அவரது தாயார் ஆகியோர் படுகாமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து, கல்முனை பிரதான வீதியின் களுதாவளை இராதாகிருஷ்ண வித்தியாலயத்திற்கு முன்னால் இன்றையதினம்(15.10.2025) இடம்பெற்றுள்ளது.
குறித்த பாடசாலையிலிருந்து பாடசாலை நிறைவடைந்ததும் தனது மகளை அழைத்துக் கொண்டு எதிரே அமைந்துள்ள பாதசாரிக் கடவையினால் வீதியைக் குறுக்கீடு செய்தவேளை, தீடீரென வந்த முச்சக்கரவண்டி, தாய் மற்றும் பிள்ளையின் மீது மோதிவிட்டு அருகிலிருந்த மரக்கறிக் கடையின் மீதும் மோதியுள்ளது.
விசாரணைகள்
இந்த விபத்துச் சம்பவத்தில் குறித்த தாயும் பிள்ளையும் படுகாயங்களுக்குட்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்ற சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாடு, விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




விஜய்யை நேரில் பார்த்ததும் காவேரி செய்த செயல், சாரதாவிற்கு தெரிந்த உண்மை... மகாநதி சீரியல் Cineulagam
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri