மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு
சுகாதார துறையிலுள்ள 6 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.
அந்த வகையில்,மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பகுதிகளில் சுகாதார ஊழியர்கள் 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று வைத்தியசாலைக்கு முன்பாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை,மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை,களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை,வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை போன்ற வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் இன்று காலை 7 மணி தொடக்கம் 12 மணி வரை தமது கடமைகளில் இருந்து வெளியேறி 15 அம்ச கோரிக்கையை முன்வைத்து வைத்தியசாலை நிர்வாக பணிமனைக்கு முன்னால் ஒன்று கூடி தமது எதிர்ப்பை தெரிவித்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.



பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri