மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வைப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வந்த கன மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்க அதிபரினால் நிவாரண உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த நிவாரண உதவிகள் இன்று (13.01.2024) ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வந்தாறுமுலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இடைத்தங்கல் முகாம்கள்
கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வந்த கன மழையினால் பாதிக்கப்பட்ட மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வந்தாறுமுலை கணேசா வித்தியாலயத்தின் இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 78 குடும்பங்களை சேர்ந்த 255 நபர்களையும் மாவட்ட அரசாங்க அதிபர் நேரில் சென்று பார்வையிட்டதுடன், இடைத்தங்கல் முகாம்களில் நிலவும் குறைபாடுகளை கேட்டறிந்த அரசாங்க அதிபர் அவற்றை உடன் தீர்த்து வைக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
குறித்த நிகழ்வில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அதிகாரிகள், ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பிரதேச செயலக அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
