மட்டக்களப்பில் நடைபெற்றுள்ள விற்பனைக் கண்காட்சி
மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட செயலகமும் மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய உள்ளூர் உற்பத்திப்பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் நடைபெற்றுள்ளது.
குறித்த கண்காட்சியானது மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் இன்று (29) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
பொருட்கொள்வனவு
கிராம மட்ட தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கம் பல்வேறு உதவி திட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில் அவர்களுக்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் இந்த உற்பத்தி கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர்களான பிரசாந்தன், உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் என பல்வேறு திணைக்கள தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த கண்காட்சியில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள உள்ளூர் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தியிருந்ததுடன் பெருமளவான மக்களும் பொருட்கொள்வனவில் ஈடுபட்டுள்ளனர்.