திருமணத்திற்கு தயாரான இளைஞன் விபத்தில் பலி

Sri Lanka Police Anuradhapura Sri Lanka Police Investigation Accident
By Vethu Dec 12, 2024 03:04 AM GMT
Report

அநுராதபுரம் - திருகோணமலை ஏ12 வீதியில் மிகிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புஞ்சிக்குளம் சந்திக்கு அருகில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மிகிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மிகிந்தலை - கம்மலக்குளம பிரதேசத்தில் வசித்து வந்த ஜே.மதுக சங்கீத் ஜயசுந்தர என்ற 27 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு: நாட்டில் கன மழைக்கு வாய்ப்பு

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு: நாட்டில் கன மழைக்கு வாய்ப்பு

பொலிஸார் விசாரணை

விபத்தில் உயிரிழந்த இளைஞனுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

திருமணத்திற்கு தயாரான இளைஞன் விபத்தில் பலி | Boy Who Was Getting Married Died In An Accident

மிகிந்தலையில்  இருந்து அனுராதபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக விசாரணை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது ​​அநுராதபுரத்தில் இருந்து மிகிந்தலை நோக்கி சொகுசு ஜீப் ஒன்று பயணித்ததாகவும், பலத்த காயங்களுக்கு உள்ளான குறித்த இளைஞனை அந்த வாகனத்தில் ஏற்றி அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

திருமணத்திற்கு தயாரான இளைஞன் விபத்தில் பலி | Boy Who Was Getting Married Died In An Accident

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தவர் ஜீப் வண்டியுடன் மோதினாரா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மிகிந்தலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சந்திரசிறி ரஞ்சித்தின் பணிப்புரையின் பேரில் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் குழு விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாடசாலையை விட்டு வெளியேறிய மாணவர்களுக்கான விசேட வேலைத்திட்டம்

பாடசாலையை விட்டு வெளியேறிய மாணவர்களுக்கான விசேட வேலைத்திட்டம்

கொழும்பு- புறக்கோட்டை அரிசி மொத்த விற்பனையகங்களில் திடீர் சோதனை

கொழும்பு- புறக்கோட்டை அரிசி மொத்த விற்பனையகங்களில் திடீர் சோதனை


you may like this video


மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US