கொழும்பு- புறக்கோட்டை அரிசி மொத்த விற்பனையகங்களில் திடீர் சோதனை
கொழும்பு புறக்கோட்டை ஐந்தாவது குறுக்குத் தெருவில் அமைந்துள்ள அரிசி மொத்த விற்பனையகங்களில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் தொடர் சோதனைகளை நடத்தியுள்ளனர்.
குறித்த சோதனையை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரிசி கையிருப்பு பதுக்கல் உள்ளிட்ட நெறிமுறைகளுக்கு புறம்பான முறைப்பாடுகளை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நெறிமுறைகளுக்கு புறம்பான முறைப்பாடு
குறித்த சோதனையின் போது, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி, அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த விற்பனையகம் ஒன்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதான தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், காலாவதியான அரிசி விற்பனை, விலைக் குறியீடுகளை காட்சிப்படுத்தாமை உள்ளிட்ட ஏனைய விதிமீறல்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மீனா தான் பெஸ்ட், நீ பிச்சைக்கார குடும்பம், ரோஹினியை வெளுத்த விஜயா... சிறகடிக்க ஆசை அதிரடி எபிசோட் Cineulagam

Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
